சீவீ குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீனும் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு புரொடக்ஷன் நெ 14 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.
சூது கவ்வும் வெற்றி படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார்.
விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது.
Post a Comment