முதல் முறையாக அப்பா கமல் படத்துடன் மோதும் ஸ்ருதி ஹாஸன்!

|

முதல் முறையாக அப்பா கமல் ஹாஸன் படத்துடன் மோதுகிறார் மகள் ஸ்ருதிஹாஸன்.

ஆம், இருவரின் படங்களும் ஒரே நாளில் பெரிய அளவில் வெளியாகின்றன.

கமல் ஹாஸன் நடித்து, லிங்குசாமியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் உத்தம வில்லன் வரும் மே மாதம் 1-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

முதல் முறையாக அப்பா கமல் படத்துடன் மோதும் ஸ்ருதி ஹாஸன்!

இதே நாளில் ஸ்ருதி ஹாஸன் இந்தியில் நடித்துள்ள பிரமாண்ட படமான கப்பர் இஸ் பேக் படமும் வெளியாகிறது. இது தமிழில் வெளியான ரமணா படத்தின் இந்தி ரீமேக் ஆகும். அக்ஷய் குமார் ஹீரோ.

ஸ்ருதி ஹாஸன் நடிக்க ஆரம்பித்த பிறகு, முதல் முறையாக இப்போதுதான் அப்பா படம் வெளியாகும் தினத்தில் அவரது படமும் வெளியாகிறது.

இதே நாளில் ரஜினி மகள் இயக்கிய வை ராஜா வை படமும் வெளியாகிறது.

 

Post a Comment