ரஜினி என் இன்ஸ்பிரேஷன், தலைவர், கடவுள்.. அவர் பெயர் என் படத் தலைப்பில் அமைந்தது என் வாழ்நாள் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சூரியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் மே மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், ரஜினி முருகன் என்ற தலைப்பில் படம் அமைந்தது, சிவகார்த்திகேயனை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, "என்னுடைய கடவுள், என்னுடைய இன்ஸ்பிரேஷன், என்னுடைய தலைவர் ரஜினி அவர்களின் பெயரில் என்னுடைய படம் அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருந்தன்மையுடன் இந்த தலைப்பை அனுமதித்த தலைவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
Post a Comment