மும்பை: பாலிவுட் நடிகை அலியா பட்டை டிவிட்டரில் பாலோ செய்வோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இத்தனை பேர் தன்னை பாலோ செய்வது குறித்து அலியா பட் மகிழ்ச்சியும், உற்சாகமும் வெளியிட்டுள்ளார்.
22 வயதான அலியா பட், தற்போது கரண் ஜோகரின் கபூர் அன்ட் சன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். தனது பாலோயர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறித்து டிவிட்டரில் தனது ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவிட்டில், ‘ஆ.. 5 மில்லியன் இப்போது.. தேங்க்யூ. நீங்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்தி விட்டீர்கள்' என்று உற்சாகம் காட்டியுள்ளார் அலியா.
இவரது நெருங்கிய நண்பர்களான நடிகர் வருண் தவான் , சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரை விட நான்கு மடங்கு அதிகம் பாலோயர்களை அலியா பட் கொண்மடிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment