சென்னை: விஷால் - காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் உருவாக்கி இருக்கும் பாயும் புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை சத்யம் திரை அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, மனோபாலா, தயாரிப்பாளர் பாரிவேந்தர், இசையமைப்பாளர் இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் போன்ற உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இசை வெளியீட்டு விழாவில் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு மரியாதை செய்யப்பட்டது, அவரின் திரு உருவப் படத்தை பாயும் புலியின் தயாரிப்பாளர் பாரிவேந்தர் திறந்து வைத்தார்.
இசை வெளியீட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகம் வழங்கப்பட்டது, மேலும் படத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் மிச்சமான பணத்தை 2 பெண்களின் கல்வி உதவித்தொகையாக வழங்கினர்.
இந்த உதவியை நடிகர் விஷாலும், தயாரிப்பாளர் பாரிவேந்தரும் இணைந்து வழங்கியுள்ளனர்.
நல்ல விஷயம் பாயும் புலிக்கு வாழ்த்துக்கள்...
Post a Comment