பரவை முனியம்மாவுக்கு உதவி.. முதல்வருக்கு நன்றி சொன்ன விஷால்

|

பரவை முனியம்மாவுக்கு ரூ 6 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சரத்குமார், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் அவருக்கு உதவி செய்துவந்தனர்.

Vishal and other stars thanked CM Jayalalithaa for helping Paravai Muniyamma

ஏழ்மை காரணமாகவும், முதுமை காரணமாகவும் பரவை முனியம்மாவால் செலவுகளைச் சமாளிக்க முடியாத சூழல். இதை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலமாக 6 லட்சம் நிதியுதவியும், மாதந்தோறும் ரூ6.ஆயிரம் உதவித் தொகையும் கட்சி நிதியில் இருந்து வழங்கப்படும் அறிவித்தார்.

இது பரவை முனியம்மாவின் வறுமைச் சூழலைப் போக்க பெரிதும் உதவியுள்ளது. உடல்ரீதியாக சற்று முன்னேற்றம் ஏற்படவும் அவருக்கு உதவியுள்ளது.

விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து சரத்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

பரவை முனியம்மா மிகவும் நெகிழ்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment