என்னோட "பர்த்டே" இன்னைக்கு இல்ல.... வாழ்த்துக்களுக்கு மறுப்பு தெரிவித்த "அஞ்சலி"

|

சென்னை: இன்று நடிகை அஞ்சலியின் பிறந்தநாள் என்று ஊரே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் எனது பிறந்தநாள் இன்று கிடையாது என்று வாழ்த்தியவர்களுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.

என்ன குழப்பமிது என்று பார்த்தால் அஞ்சலி சொல்வது உண்மைதான் அவரின் உண்மையான பிறந்தநாள் ஜூன் 16 ம் தேதிதான். ஆனால் பலரும் இன்று தான் அவரின் பிறந்த நாள் என்று சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட அஞ்சலி " இன்று என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் உங்கள் வாழ்த்துக்களை ஜூன் 16 ம் தேதியன்று எனக்கு அனுப்பி வையுங்கள். ஏனென்றால் அன்று தான் எனது உண்மையான பிறந்தநாள்" என்று கூறியிருக்கிறார்.

அஞ்சலி தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கிறார், விரைவில் அஞ்சலியின் நடிப்பில் மாப்ள சிங்கம் திரைப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அட பிறந்தநாளிலும் குழப்பமா?

 

Post a Comment