நான்கு நாட்களில் 384 மில்லியன் டாலர்களைக் குவித்தது ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7!

|

வெளியான முதல் நான்கே நாட்களில் அமெரிக்காவில் 384 மில்லியன் டாலர்களைக் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7.

யுனிவர்சல் நிறுவனம் இதுவரை வெளியிட்ட படங்களிலேயே அதிக முதல் வார வசூல் இந்தப் படத்துக்குத்தான்.

அதேபோல, இதுவரை வெளியான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்களின் வரிசையில், அதிக வசூல் குவித்ததும் இந்தப் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்களில் 384 மில்லியன் டாலர்களைக் குவித்தது ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7!

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகெங்கும் 10500 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. இந்தியாவில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக 200 அரங்குகள் இந்தப் படத்துக்கு தரப்பட்டது.

வசூலில் உலகெங்கும் இந்தப் படம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதல் நான்கு நாட்களில் மட்டும் 143.6 மில்லியன் டாலர்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது இந்தப் படம். உலகெங்கும் 384 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. இதுவரை எந்தப் படத்துக்கும் இந்த வசூல் கிடைத்ததில்லை.

இந்தியாவில்..

இந்தியாவில் மட்டுமே கடந்த நான்கு தினங்களில் ரூ 50 கோடி இந்தப் படத்துக்கு வசூலாகியுள்ளது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

 

Post a Comment