தல 56: மீண்டும் "ரெட்" ஸ்டைலுக்குத் திரும்பிய அஜீத்

|

சென்னை: தல 56 படத்தில் அஜீத் மொட்டைத் தலையுடன் நடித்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் ரெட் படத்தில் அஜீத் நடித்தது போன்று இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

சிறுத்தை சிவா இயக்கும் தல 56 படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் நடிப்பதாகத்தான் முதலில் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து அந்த கெட்டப்பில் அஜீத் நடித்த புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானது.

Ajith's New Look In Thala 56

இந்நிலையில் தற்போது மொட்டை தலையுடனும் அஜித் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறுகின்றனர். அஜித் மொட்டை தலையுடன் நடிக்கும் காட்சிகள் படத்தில் "பிளாஷ்பேக்" காட்சிகளாக வருமாம்.

இந்த கெட்டப்புடன் எடுக்கப்பட்ட காட்சிகளை கொல்கத்தாவில் ரகசியமாக படம் பிடித்துள்ளார் சிறுத்தை சிவா. ஏற்கெனவே அஜித் மொட்டை தலையுடன் ‘ரெட்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல 56 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க பாசமான தங்கையாக லட்சுமிமேனன் நடித்திருக்கிறார். மேலும் அஸ்வின்,சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தீபாவளிக்கு படத்தை வெளியிட "தல 56" படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தல 56 எதிர்பார்ப்பு அதிகமாகிட்டே போகுது போல...

 

Post a Comment