ரூ.1கோடி சம்பளம் கேட்டேனா? : தமன்னா ஆவேசம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரூ.1 கோடி சம்பளம் கேட்டதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்கள் என தகவல் வெளியானது. இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியது: தமிழில் கார்த்தியுடன் 'சிறுத்தை’, தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3 படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள¢ளன. இந்த படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. மொத்தம் 6 படங்களில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை. இதற்கிடையில் சிலர் என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். அவர்களிடம் என்னுடைய சூழலை சொன்னேன். 'ஜனவரியிலாவது கால்ஷீட் கொடுங்கள்Õ என்றனர். 'அதுவும் முடியாதுÕ என்றேன். இதை மனதில் வைத்துக்கொண்டு 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள். நான் யாரைப் பற்றியும் தவறாக கூற விரும்பவில்லை. ஒரே நாள் இரவில் நான் ஹீரோயின் ஆகிவிடவில்லை. கஷ்டப்பட்டு நடித்து, படிப்படியாக முன்னேறிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.


Source: Dinakaran
 

Post a Comment