விஜய் சேதுபதி, வசுந்தரா நடித்துள்ள 'தென்மேற்கு பருவக்காற்று’ பட கேசட் விழாவில் பங்கேற்றார் இயக்குனர் ஜனநாதன். அப்போது அவர் பேசியது: இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, 'பட கேசட் ரிலீஸுக்கு வர வேண்டும். முன்னதாக பாடல்களை போட்டுக் காட்டுகிறேன்Õ என்றார். 'பாடலை போட்டுக் காட்டாதீர்கள். என் படமாக இருந்தாலும் யாருக்கும் போட்டுக் காட்ட மாட்டேன்Õ என்றேன். இதை கூறுவதற்கு காரணம் உண்டு. 10 பேருக்கு படத்தை காட்டினால் அதில் 5 பேர், 'படமா எடுத்திருக்கிறான். தண்டம், ஊத்திக்கும்Õ என்பார்கள். இன்னும் 5 பேர், சாதாரண காட்சியைக்கூட 'தலைவா சூப்பர். ஆஹா, ஓஹோÕ என்று புகழ்வார்கள். அதை நம்ப முடியாது. 'ஈÕ படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஒவ்வொரு காட்சியையும் கைதட்டி ரசித்தார். 'படம் நீளமாக இருக்கிறது. குறைக்கப் போகிறேன்Õ என்றபோது 'வேண்டாம்Õ என்றார். பிறகுதான் நினைவுக்கு வந்தது, அது அவரது மகன் ஜீவா நடித்த படம் என்பது. அவருக்கு எடுத்துச் சொன்னதும் புரிந்து கொண்டார். பின் நீளத்தை குறைத்தேன். இவ்வாறு ஜனநாதன் பேசினார்.
Source: Dinakaran
Post a Comment