சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் தனுஷ் எந்திரன் படத்தை இரண்டாவது முறையாக பார்த்து மகிழ்ந்தார். படத்தை வி.ஐ.பி காட்சியில் பார்த்த தனுஷ், ஒரு வாரம் கழித்து ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார். எந்திரன் படத்தை மீண்டும் பார்த்த தனுஷ், அந்த அனுபவம் குறித்து கூறுகையில், “ஒரு வாரம் கழித்து மீண்டும் எந்திரன் பார்த்தேன். படத்தை ரசிகர்கள் ரசிக்கும் விதம், ரசிகரல்லாதவர்களும் தரும் வரவேற்பு என்னை அதிசயிக்க வைத்தது. என் மாமனார் அவர் என்பதால் நான் இப்படிச் சொல்லவில்லை. நான் என்ன சொன்னாலும் அவர் விஷயத்தில் அது கொஞ்சம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் அவர் இந்த அளவு உழைக்கக் காரணம், சினிமா மீதுள்ள அவரது காதல்தான் என்றார்.
Source: Dinakaran
Post a Comment