ஓவர் ஸ்பீடாக பைக் ஓட்டிய நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு 15நாள் சிறை

|

John Abraham
மும்பை: முன்னணி இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு 15 நாள் சிறைத் தண்டனையும் ரூ 1500 அபராதமும் விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிவேகமாக பைக் ஓட்டி இருவரை காயப்படுத்திய குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் (வயது 37), கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி, சைக்கிள்களில் சென்ற இருவர் மீது மோதி காயம் ஏற்படுத்தி விட்டார். இந்த விபத்தில் ஜான் ஆபிரகாமுக்கும் காலில் காயம் ஏற்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை 9-வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு எஸ்.பி.குல்கர்னி, ஜான் ஆபிரகாமுக்கு 15 நாள் சிறைத் தண்டனையும். ரூ.1,500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

ஆனாலும் இந்த வழக்கில் அப்பீல் செய்வதற்கு ஜானுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கால கட்டத்துக்குள் அப்பீல் செய்யாவிடில் அவர் கைது செய்யப்படுவார்!

 

Post a Comment