‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக்கை வேகமாக ஆரம்பித்தார் இயக்குனர் கவுதம் மேனன். இதில் ஓரிரு படங்களில் தலைகாட்டிய பிரதீக் பப்பர் ஹீரோ. அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்த சில காட்சிகளை படமாக்கினார். கால்ஷீட் பிரச்னையால் படத்திலிருந்து த்ரிஷா விலகிவிட்டார். இதையடுத்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முன்னணி இந்தி நடிகைகளிடம் கவுதம் பேசினார். ஆனால் ஹீரோ பிரதீக் என்பதால் அந்த நடிகைகள் நடிக்க மறுத்துவிட்டனர். புதுமுகம் சிலரை போட்டோ ஷூட் எடுத்தும் பார்த்தாராம். அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. பிரபலம் இல்லாத இந்தி நடிகைகளை தேர்வு செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லையாம். இதனால் ஹீரோயினை தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்தில் உள்ளார் கவுதம்.
Source: Dinakaran
Post a Comment