முதல்வராவேன் என்று குரல் கொடுக்காத ஒரே தலைவன் நான்தான் - டி.ராஜேந்தர்

|

Vijaya T.Rajendhar
நெல்லை: 25 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். நாளைய முதல்வர் என குரல் கொடுக்காத ஓரே அரசியல் கட்சி தலைவர் நான்தான். ஆனால் மக்களுக்கு குரல் கொடுப்பதில் முதல்வராக இருக்கிறேன். பணபலம் இல்லை என்றாலும் மனபலத்துடன் கட்சி நடத்துகிறேன் என நெல்லையில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, தேர்தலில் மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தை தவிர்த்து வாக்கு சீட்டு மூலம் ஓட்டு போடும் நிலைக்கு நாடு திரும்ப வேண்டும்.
லட்சிய திமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். 25 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். நாளைய முதல்வர் என குரல் கொடுக்காத ஓரே அரசியல் கட்சி தலைவர் நான்தான். ஆனால் மக்களுக்கு குரல் கொடுப்பதில் முதல்வராக இருக்கிறேன். பணபலம் இல்லை என்றாலும் மனபலத்துடன் கட்சி நடத்துகிறேன்.
லட்சிய திமுக அங்கீகரக்கப்பட்ட கட்சியாக பதிவு செய்ய 9 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். எனவே வருகிற தேர்தலில் 20 முதல் 30 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வோம்.
காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கிறது என்பதை பொறுத்துதான் கூட்டணி முடிவு செய்யப்படும். காங்கிரஸ் இல்லாத கூட்டணிக்கு நாங்கள் அழைக்கப்படுவோம் என்றார் அவர்.
 

Post a Comment