சத்யா, அஞ்சலி, நாசர், கருணாஸ் நடிக்கும் படம் 'மகாராஜா'. ஜெய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெ.ரவி தயாரிக்கிறார். டி.மனோஹரன் இயக்குகிறார். இதில் நடித்தது பற்றி நிருபர்களிடம் அஞ்சலி கூறியதாவது: மாடர்ன் பெண்ணாக வருகிறேன். இதனால், ஏராளமான மாடர்ன் உடைகள் அணிந்து நடித்தேன். இளம் தலைமுறையினரைப் பார்த்து, அவர்களைப் போன்று மாற நினைத்து, அதன்மூலம் சந்திக்கும் பிரச்னைகளால் படிப்பினை பெறுகின்ற கதை. இளம் ஜோடிகளாக நானும், சத்யாவும் நடிக்கிறோம். நாசர், சரண்யா இன்னொரு ஜோடி. நாசருக்கு அனிதாவும் ஜோடி. அது எப்படி என்பது சஸ்பென்ஸ். இந்த படத்துக்காக மலேசியாவின் புத்ரஜெயா பகுதியில் படமான, 'மெக்ஸி மெக்ஸிகன் லேடி' பாடல் காட்சியில் பங்கேற்றேன். அப்போது 122 டிகிரி வெயில். இடைவிடாமல் நடனமாடியதால், மயக்கம் வருவது போல் இருந்தது. ஒருகட்டத்தில் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பயந்து விட்டனர். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த டாக்டரிடம் சிகிச்சை பெற்றேன். இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்த நான், இதில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். கதைக்கு அது அவசியம் என்றதால் நடித்தேன். இவ்வாறு அஞ்சலி கூறினார்.
Source: Dinakaran
Post a Comment