அவதார் -2...வேலையைத் துவங்கினார் கேமரூன்!

|

Avatar
வசூலிலும் தரத்திலும் யாரும் எட்ட முடியாத சிகரம் தொட்ட சினிமா என்றால் உலக அளவில் அது ஜேம்ஸ் கேமரூனின் அவதார் மட்டுமே.
நாடுகள், மொழிகளின் எல்லைகளைக் கடந்து மக்களின் மனங்களை வென்ற சினிமா அது. இப்போதும் சென்னையில் இந்தப் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா…
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்பாக டைம் இதழால் பாராட்டப்பட்ட அவதாரின் அடுத்த பாகம் தயாராகிறது.
அவதார்-2 என்ற பெயரில் தயாராகும் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை ஜேம்ஸ் கேமரூன் தொடங்கியுள்ளார். இப்போதைக்கு அதன் முழு ஸ்கிரிப்டையும் முடிவு செய்வது முக்கியம் என்பதால், அந்தப் பணியில் கவனம் செலுத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.
அவதார்-2-ன் படப்பிடிப்பு வரும் 2011 மே மாதம் தொடங்கும் என ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நிறுவனம் அறிவித்துள்ளது.
அவதாரின் மூன்றாவது பாகமும் தயாராக உள்ளது. இதனை 2015ம் ஆண்டு துவக்கவிருக்கிறார்களாம்.
ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து இந்த இரு படங்களையும் ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நிறுவனமே தயாரிக்கிறது.
இதற்கிடையே, எகிப்திய பேரரசி கிளியோபாட்ரா பற்றிய படம் ஒன்றையும் கேமரூன் எடுக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக ஏஞ்சலினா ஜூலி நடிக்கிறார்.
 

Post a Comment