1/6/2011 10:43:02 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
அருணான நடிகரு தன்னோட புது படத்துக்கு ஆக்ஷன் காட்சிகளை தானே எழுதியிருக்கிறாராம்… எழுதியிருக்கிறாராம்… இதை அப்படியே சேர்க¢கலாம்னு டைரக்டருகிட்ட சொன்னாராம். எதையும் சொல்ல முடியாம டைரக்டரு தவிக்கிறாராம்… தவிக்கிறாராம்…
தம்பியை வச்சு படம் இயக்குற செல்வமான இயக்கம், ஷூட்டிங்கை நிறுத்தியிருக்கிறாராம்… நிறுத்திய¤ருக்கிறாராம்… செலவு அதிமானதால நிறுத்தலையாம். அடுத்து எந்த காட்சியை படமாக்கலாம்னு யூனிட்டோடு உட்கார்ந்து யோசிக்கிறாராம்… யோச¤க்கிறாராம்… முழு ஸ்கிரிப்ட்டும் ரெடியான பிறகுதான் அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கு போவாராம்… போவாராம்…
அஞ்சாத வில்லன் நடிகரு அப்செட்ல இருக்கிறாராம்… இருக்கிறாராம்… கைவசம் ஒரு படம்தான் இருக்கு. அதுலேயும் ஹீரோவா நடிக்கிற டைரக்டருக்குத்தான் முக்கியத்துவமாம்… முக்கியத்துவமாம்… அதனாலதான் நடிகரு அப்செட்டா இருக்காராம்… இருக்காராம்…
Post a Comment