என்னுடைய சினிமா கேரியரில் பெஸ்ட் ஃபிலிம்
1/6/2011 11:11:06 AM
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் தனுஷின் ஆடுகளம் பொங்கலுக்கு வெளியாகிறது. பொல்லாதவன் படத்தை இயக்கிய வெற்றிமாறனின் படைப்பு என்பதால் அனைத்து தரப்பினரும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை பின்னணியில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். தனுஷுடன் கவிஞர் வஐசா ஜெயபாலன், சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். டெல்லி மாடல் டாப்ஸி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஆடுகளத்தைப் பற்றி தனுஷ் குறிப்பிடுகையில், என்னுடைய சினிமா கேரியரில் பெஸ்ட் ஃபிலிம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறேன். படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்ந்து கொள்வீர்கள் என்றார்.
Source: Dinakaran
Post a Comment