கவர்ச்சி,ஹோம்லி கவலை இல்லை :தன்ஷிகா பேட்டி!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவர்ச்சி, ஹோம்லி கவலை இல்லை : தன்ஷிகா பேட்டி!

1/12/2011 11:30:23 AM

நடிகை தன்ஷிகா கூறியது: ஜனநாதன் இயக்கிய 'பேராண்மைÕ படத்தில் போல்டான வேடம். நல்ல வரவேற்பு கிடைத்தது. 'மாஞ்சா வேலுÕவில் Ôபேராண்மைÕயுடன் ஒப்பிடும்போது முற்றிலும் எதிர்மாறான கேரக்டர். 'நில் கவனி செல்லாதேÕ படத்தில் மாடர்ன் பெண் வேடம். இப்படத்தை மீண்டும் பிப்ரவரியில் ரிலீஸ் செய்கின்றனர். அடுத்து வசந்தபாலன் இயக்கும் 'அரவான்Õ படத்தில் நடிக்கிறேன். வரலாற்று பின்னணியில் அமைந்த படம். கிராமத்து பெண்ணாக நடிக் கிறேன். அந்த காலத்தில் பெண்கள் ஜாக்கெட் அணிவதில்லை. எனது வேடமும் அப்படித்தான் காட்டப்படுகிறது. படம் முழுக்க ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறேன். ஆனாலும் கவர்ச்சி இருக்காது. வந்தோம், போனோம் என்றில்லாமல் மனதில் பதியும் வேடங்களாகவே தேர்வு செய்து நடிக்கிறேன். கவர்ச்சியா, கவர்ச்சி இல்லாத வேடமா என்று பார்ப்பதில்லை. இதுதான் என் பாலிசி.


Source: Dinakaran
 

Post a Comment