நண்பன் படத்தில் லாரன்ஸ் கெஸ்ட் ரோல்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நண்பன் படத்தில் லாரன்ஸ் கெஸ்ட் ரோல்!

2/11/2011 3:57:31 PM

ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், '3 இடியட்ஸ்'. இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் ஆமிர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார்.

மேலும் இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், அனுயா உட்பட பலர் நடிக்கின்றனர். நண்பன் படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். 'எந்திரன்' சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, ஷங்கர் இயக்குகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள். படத்தின் ஷூட்டிங், ஊட்டியில் நடந்து வருகிறது. இம்மாதம் 25&ம் தேதி முதல் விஜய் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகிறது.

இந்நிலையில் நண்பன் மேலும் ஒரு கெஸ்ட் ரோலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதலில் இந்த கெஸ்ட் ரோலுக்கு நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.


Source: Dinakaran
 

Post a Comment