3/7/2011 12:50:17 PM
விஷ்ணு கூறியது: யதார்த்தமான கேரக்டரில்தான் Ôவெண்ணிலா கபடி குழுÕவில் நடித்தேன். அடுத்து நடித்த 'பலே பாண்டியாÕ, 'துரோகிÕ படங்களில் காமெடி, ஆக்ஷன் கலந்து நடித்தேன். 'யதார்த்த ஹீரோவிலிருந்து மாறியதற்கு காரணம் ஆக்ஷன் ஹீரோ ஆசையா?Õ என்கிறார்கள். இல்லை. ஒரே சாயல் வேடங்களில் நடித்தால் இதுதவிர வேறு கேரக்டருக்கு லாயக்கு இல்லை என்று எண்ணிவிடக் கூடாது என்பதால்தான் அடுத்தடுத்த ஸ்கிரிப்டை தேர்வு செய்தேன். இப்போது 'குள்ளநரிக் கூட்டம்Õ படத்தில் நடிக்கிறேன். சுசீந்திரனுடன் வெ.க.குழுவில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீபாலாஜி இயக்குகிறார். நடுத்தர மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை மையமாக கொண்ட கதை. இதையடுத்து சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். சமமான ரோல் என்ற பட்சத்தில் இரண்டு ஹீரோ படங்களில் நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. பொதுவாக ஹீரோக்கள் கதை விவாதத்தில் பங்கேற்பது பற்றி இருவித கருத்து நிலவுகிறது. ஒரு ஹீரோ தன்னுடைய முழு பொறுப்பையும் டைரக்டரிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அதில் நடிக்கிறார். அந்த படத்தின் வெற்றியை பொறுத்தே இருவருக்கும் பெயர் கிடைக்கிறது. இயக்குனர் விருப்பப்பட்டால் ஹீரோவும் கதை விவாதத்தில் பங்கேற்பதில் தவறில்லை.
Post a Comment