மகளிர் தினத்துக்காக ஜெனிலியா இசை நிகழ்ச்சி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மகளிர் தினத்துக்காக ஜெனிலியா இசை நிகழ்ச்சி

3/7/2011 12:43:31 PM

மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பையில் நாளை இரவு, ராக் இசை நிகழ்ச்சியை தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நடத்துகிறார் ஜெனிலியா.
இதுபற்றி ஜெனிலியா கூறியதாவது: இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. பெண்களுக்கான சக்தியையும், திறமையையும் எப்போதும் மதிப்பவள் நான். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படிப்பறிவு பெற்றால் அந்த மொத்த குடும்பமும் பிரகாசமாக இருக்கும். இது கண்கூடு. பெண்களை கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக முன்னெடுக்க இப்படியொரு நிகழ்ச்சியில் என்னை இணைத்துள்ளேன். இதற்கு அனைவரது ஆதரவும் வேண்டும். நடிகை என்பதை தாண்டி இது போலான நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
 


Source: Dinakaran
 

Post a Comment