3/7/2011 12:45:58 PM
கே.வி.ஆனந்த் இயக்கும் 'மாற்றான்' படத்தில் சூர்யா 5 வேடங்களில் நடிக்கிறார். இதுபற்றி கே.வி.ஆனந்த்திடம் கேட்டபோது கூறியதாவது: நான் இயக்கியுள்ள 'கோ' படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. வரும் 23ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம். தேர்தல் வர இருப்பதால் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும். இதில், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை நடிக்க வைத்தது ஏன் என்கிறார்கள். ஒரு விழாவில் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வது போலான காட்சி அது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றதும் முதலில் ஹாரிஸ் மறுத்தார். பிறகு சம்மதிக்க வைத்தோம். சில வரிகளை பாடுவதுபோல் படமாக்கியுள்ளோம். நான் அடுத்து இயக்கும் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. அதில் எதுவும் உண்மையில்லை. இந்த படத்தில் சூர்யா, 5 கேரக்டரில் நடிக்கிறார். மற்ற விஷயங்களை 'கோ' ரிலீசுக்குப் பிறகு சொல்கிறேன். இவ்வாறு கே.வி. ஆனந்த் கூறினார்.
Post a Comment