4/23/2011 10:01:38 AM
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் படம் 'அரவான்'. இதில் ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி, கரிகாலன் உட்பட பலர் நடிக்கிறார்கள். பின்னணி பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். 18-ம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக இது உருவாகிறது. இதற்காக, மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டியில் உள்ள ஓவா மலையில் பழங்கால தமிழர்களின் கிராமத்து செட் அமைத்து பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குனர் வசந்தபாலன் கூறியதாவது:
போர்காலத்தில் பாண்டியர்கள் மறைந்து வாழ்ந்த பகுதியாக, ஓவா மலை குறிப்பிடப்படுகிறது. இங்கு இதுவரை எந்தப் படத்தின் ஷூட்டிங்கும் நடத்தப்பட்டதில்லை. பழமையின் புனிதம் மாறாமல் இந்த மலை பல வகை மூலிகைகளுடன் இன்றும் அப்படியே இருக்கிறது. சுமார் 250 ஏக்கரில் இருக்கும் இந்த மலையினுள் குகைகள், சுனைகள், சமணப்படுகைகள் ஏராளமாக உள்ளன. தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலையில் ஏராளமான வரலாற்று சுவடுகள் இருக்கின்றன. இதை இன்னும் ஆய்வு செய்தால் புதிய செய்திகள் கிடைக்கலாம். இந்த மலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் பழங்கால தமிழர்களின் கிராமம் செட் அமைத்து படமாக்கியுள்ளோம். விஜய் முருகன் அமைத்துள்ள அந்த செட் பேசப்படுவதாக இருக்கும். ஐரோப்பிய படங்களைப் பார்க்கும்போது இருக்கும் புதுமையும், ரிச்சும் இந்த மலையில் கிடைத்துள்ளது. ஷூட்டிங் நடக்கும்போது ஏதாவது ஒரு மூலிகை செடி, உரசி மயங்கி விழுந்தவர்கள் 15 பேர். அவர்களை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். இவ்வாறு வசந்தபாலன் கூறினார்.
Post a Comment