4/23/2011 9:59:52 AM
சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் 'போராளி' படத்தில் ஸ்வாதி, வசுந்தரா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் 'போராளி'. இதை சமுத்திரக்கனி இயக்குகிறார். இந்தப் படத்தில், 'குறும்பு' அல்லரி நரேஷ், 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதி, வசுந்தரா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோயினை தேடி வருகின்றனர். ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கு பிரச்னைதான். அந்த பிரச்னைகளை எதிர்கொள்ளுவது எப்போதும் போராட்டமாகத்தான் இருக்கிறது. இதை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இது ஈழத்து பின்னணியை கொண்ட கதை என்று வந்த தகவலை, சசிகுமார் மறுத்தார்.
Post a Comment