4/23/2011 10:15:26 AM
முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா, தமிழில் 'கோ' மூலம் அறிமுகமாகியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'கோ' படம் பார்க்கும்போது என்னை புதுமுக நடிகையாக பாருங்கள். ராதா மகள் என்று பார்க்காதீர்கள். அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள். ராதா மகள் என்ற பின்னணி அறிமுகத்துக்கு உதவலாம். ஆனால் நான் என் சொந்த திறமையால்தான் நிலைத்து நிற்க முடியும். 20 வருடங்களுக்கு முன்பே அம்மா நீச்சல் உடையிலும், கவர்ச்சியாகவும் நடித்து விட்டார். கதைக்கு தேவையென்றால் நானும் அதுபோன்று நடிப்பேன். அம்மாவும் பெரியம்மா அம்பிகாவும் தனித்தனியாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இருவரையும் பார்த்து வளர்ந்தவள் என்பதால் இருவரின் திறமையையும் என்னிடம் பார்க்கலாம். தென்னிந்திய மொழிகளில் நடித்தாலும் தமிழில் நடிப்பதையே பெருமையாக கருதுகிறேன்.
Post a Comment