நார்வே திரைப்பட விழாவில் எந்திரன் படத்துக்கு 3 விருது!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நார்வே திரைப்பட விழாவில் எந்திரன் படத்துக்கு 3 விருது!

4/27/2011 10:29:42 AM

நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா, கடந்த 20-ம் தேதி ஆஸ்லோவில் துவங்கி 25-ம் தேதி வரை நடந்தது. வசீகரன் சிவலிங்கம் என்பவரின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் இவ்விழாவை வருடா வருடம் நடத்தி வருகிறது. இயக்குனர்கள் சேரன், ராதாமோகன், பிரபு சாலமன், வெற்றிமாறன், சீனு ராமசாமி, விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், 'எந்திரன்', 'மதராசப்பட்டினம்', 'மைனா', 'பயணம்' உட்பட 15 படங்களும் 10 குறும்படங்களும் திரையிடப்பட்டன. பின்னர் 23 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சன் பிக்சர்ஸின் 'எந்திரன்' படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த மேக்கப் மற்றும் சிறந்த தயாரிப்பு ஆகிய 3 விருது கிடைத்தது. சிறந்த படமாக பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனராக, ராதா மோகனும் (பயணம்), நடிகராக விதார்த்தும் (மைனா), நடிகையாக அஞ்சலியும் (அங்காடி தெரு) தேர்வு செய்யப்பட்டனர்.


Source: Dinakaran
 

Post a Comment