4/18/2011 11:42:51 AM
ஏ.வி ஸ்கிரீன்ஸ் சார்பில் எக்ஸ்.பி.ராஜன் தயாரிக்கும் படம், 'சூரியநகரம்'. இதில் ராகுல், மீரா நந்தன், ஸ்ரீதர், கஞ்சா கருப்பு, சூரி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜே.கே.வெங்கி. இசை, ஃபென்வியாலி. பாடல்கள், வைரமுத்து. எம்.செல்லமுத்து இயக்குகிறார். படம் பற்றி இயக்குனர் எம்.செல்லமுத்து கூறியதாவது: மதுரைக்கு பல பெயர்கள். அதில், ஒன்று சூரியநகரம். சாதிப் பிரச்னையால் காதல் ஜெயிக்கிறதா இல்லையா என்பது கதை. 'உன்னைப் பிரிவேனா' என்ற பாடல் காட்சியை, வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகப்பட்டியில் படமாக்கினேன். கோம்பை அருகிலுள்ள ராமக்கல்மெட்டு பகுதி, இதுவரை எந்த படத்திலும் வரவில்லை. அதன் அழகை அப்படியே படமாக்கியுள்ளோம். ராகுல், மீரா நந்தன் நடித்த இப்பாடல் காட்சி ஹைலைட்டாக இருக்கும். 60 நாட்களில் ஷூட்டிங் நடத்தினோம். ஃபென் வியாலியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.
Post a Comment