இந்தியில் கோ படத்தில் அக்சய் குமார்
5/3/2011 11:23:27 AM
சுமாரான படத்தை ரீமேக் செய்யவே முட்டி மோதுவார்கள். கோ சூப்பர்ஹிட் படம். ரிலீஸாவதற்குள் பாய்ந்து வருகின்றன ஆஃபர்கள். அக்சய் குமாருக்கு மும்பையில் கோ படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர் உடனடியாக கே.வி.ஆனந்துக்கு ஃபோன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்தப் பாராட்டு அப்படியே இந்தி ரீமேக்கில்தான் சென்று முடியும் என்கிறார்கள். ஆனந்த் உடனடியாக சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை தொடங்கயிருப்பதால் கோ இந்தியில் ரீமேக் செய்யப்பட்டால் ஆனந்த் அதை இயக்க மாட்டார் என்கிறார்கள்.
Post a Comment