5/3/2011 2:14:20 PM
அசின் கூறியது: தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதில்லையா என்கிறார்கள். நல்ல கதைகள் வரும்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்தியில் 'ரெடிÕ படம் நடித்துள்ளேன். தமிழில் வெளியான 'உத்தமபுத்திரன்Õதான் இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தார். அவரைப்போல் நீங்கள் நடித்திருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. அவர் ஏற்ற கேரக்டரை முற்றிலுமாக மாற்றி இருக்கிறார்கள். சீன்கள், திரைக்கதை மற்றும் கேரக்டரின் தன்மைகள் என்று படம் முழுவதுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கேரக்டர் என்ன டிமாண்ட் செய்கிறதோ அதை நிறைவு செய்வதுதான் எனது எண்ணம். அதேநேரம் வேறு யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன்.
Post a Comment