5/12/2011 2:11:41 PM
'பாய்ஸ்' சித்தார்த்தும், ஸ்ருதியும் நெருங்கிப் பழகுகின்றனர் என்ற கிசுகிசு பரவி வருகிறது. இந்நிலையில் ஆங்கில பத்திரிகையொன்றில், இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் ஒன்றாக வாழ்வதாக தகவல் வெளியானது. இதுபற்றி ஸ்ருதியின் தந்தை கமல்ஹாசனிடம் கேட்டபோது, அவர் மறுப்பெதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ருதியிடம் கேட்டபோது, 'நான் சினிமா வாழ்க்கையையும், நிஜவாழ்க்கையையும் ஒன்றாக கலப்பதில்லை. என் படங்களைப்பற்றி கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். எனது சொந்த வாழ்க்கையில் யாரும் தலையிடுவதை விரும்பவில்லை. இதுபற்றி வெளிப்படையாக மீடியாவில் விவாதிக்க விருப்பமில்லை. எனது உணர்வுகளை புரிந்துகொண்டு மதிப்பளிப்பார்கள் என்று கருதுகிறேன்' என்றார். இவரது இந்த பதிலால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Post a Comment