6/24/2011 2:27:54 PM
பாரதிராஜா மும்பை சென்றபோது ஒரு பார்ட்டியில் காஜல் அகர்வாலை சந்தித்தார். உடனே தான் இயக்கிய 'பொம்மலாட்டம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதே படத்தை இந்தியிலும் ரீமேக் செய்து அதிலும் காஜலையே நடிக்க வைத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார் காஜல். தெலுங்கில் டாப் ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தார். இந்நிலையில் 'சிங்கம்’ படம் இந்தியில் ரீமேக் ஆனது. இதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆனார். தென்னிந்திய படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ‘தமிழ் படம்தான் என்னை சினிமாவுக்கு அடையாளம் காட்டியது, தெலுங்கு படவுலகம் என்னை கைதூக்கி விட்டது’ என உணர்ச்சிவசப்பட்டார். இப்போது பாலிவுட் படத்தில் நடிப்பதால் அதற்கு ஏற்ப தனது பேச்சை மாற்றிக்கொண்டிருக்கிறார் காஜல். '’மும்பையில்தான் நான் பிறந்தேன். இந்தியில் புகழ் பெற வேண்டும் என்பதுதான் ஆசை. அந்த ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. தொடர்ந்து பாலிவுட் படங்கள் மீது கவனம் செலுத்துவேன். நான் பாலிவுட் நடிகைதான்’ என்று பேட்டி அளிக்க தொடங்கி இருக்கிறார்.
Post a Comment