தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சென்னையில் கைது

|


ஹைதராபாத்: திரைப்பட ஃபைனான்சியர் ஜெயந்த் ரெட்டியை மிரட்டியதற்காக தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சிங்கனமலா ரமேஷ் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த ரமேஷை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். அவர் இன்று பிற்பகலில் ஹைதராபாத் கொண்டுசெல்லப்பட்டார்.

முன்னதாக தனது 7.2 கோடி ரூபாய் பணத்தைக் கேட்டதற்காக ரமேஷும், பானு கிரண் என்பவரும் தன்னைக் கொலை செய்துவிடுவதாக 2008-ம் ஆண்டு மிரட்டல் விடுத்தனர் என்று ஜெயந்த் ரெட்டி இந்த ஆண்டு பிப்ரவரியில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.

மதலச்செருவு சூரி என்ற தாதாவின் கொலைவழக்கில் பானு கிரண் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர்.

கொமரம் புலி படத்தின் விடியோ உரிமை தொடர்பாக ஷாலிமர் விடியோவின் உரிமையாளரை மோசடி செய்ததாகவும் ரமேஷ் மீது குற்றச்சாட்டு உள்ளது.

ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் சூரி படுகொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என போலீசார் கருதுகின்றனர்.

 

Post a Comment