விஜய் ரசிகர்கள் 50 பேர் கண்தானம்

|


விஜய் பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் அவரது ரசிகர்கள் 50 பேர் நேற்று கண்தானம் செய்தனர்.

நாகர்கோயில் அருகே ஆசாரி பள்ளத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் ஆசாரி பள்ளத்தில் நடந்தது. இதில் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் 50 பேர் கண் தானம் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னிலையில் விஜய் ரசிகர்கள் 50 பேரும் கண் தானம் செய்தனர்.

கண்தானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய சந்திரசேகரன், உங்களைப் போன்ற ரசிகர்கள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். இந்த நல்ல காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை விஜய் அமைத்துத் தருவார், என்றார்.
 

Post a Comment