எனது இயக்குநர்களில் பெஸ்ட் வெங்கட் பிரபுதான்! - அஜீத்

|


என்னை இதுவரை இயக்கியவர்களில் பெஸ்ட் என்றால் வெங்கட் பிரபுதான். அவர் மிகச் சிறந்த தொழில்முறை இயக்குநர், என்று நடிகர் அஜீத் கூறியுள்ளார்.

தனது 50 வது படமான மங்காத்தா குறித்து அஜீத் முதல் முறையாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்தப் படம் குறித்தும் அதன் இயக்குநர் குறித்தும் பெரிதாக பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், "வெங்கட் பிரபு ஒரு தொழில்முறை இயக்குநர். மிகப் பக்குவமானவர். அவரோடு பணியாற்றிய நாட்கள் இனிமையானவை. அனைவரையும் அனுசரித்து வேலை வாங்குவதில் வெங்கட்டுக்கு நிகர் யாருமில்லை.

நான் இதுவரை வேலைபார்த்த இயக்குநர்களிலேயே பெஸ்ட் என்றால் வெங்கட்டைத்தான் சொல்வேன்.

இந்தப் படத்தில் நான் வினாயக் மாதவன் என்ற ரோலில் வருகிறேன். பணம் பணம் பணம் என்று பணத்தையே குறியாகக் கொண்ட கேரக்டர் அது. இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு மோசமான கேரக்டர் அது. நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்," என்று கூறியுள்ளார்.

அஜீத்துக்கு இதில் இரட்டை வேடம். ஒருவர் போலீஸ்... மற்றவர், மேலே நீங்கள் படித்த கேரக்டர்தான்!
 

Post a Comment