மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் "சின்னக்குயில்" சித்ரா!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் ‘சின்னக்குயில்’ சித்ரா!

7/9/2011 12:14:08 PM

தனது மகள் இறந்த சோகத்தில் சில மாதங்களாக பின்னணி பாடாமல் இருந்த சித்ரா, மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார். Ôபூவே பூச்சூட வாÕ படத்தில் `சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…' எனப் பாடி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது இதமான குரலால் ஈர்த்தவர் பாடகி சித்ரா. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத் தப்பட்டவர். பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ் சினிமா மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இதுவரை 15 ஆயிரம் பாடல்களைப் பாடி, ஆறு முறை தேசிய விருதுகளையும் தட்டி வந்துள்ளார்.

தனது பாடல்களால் மக்களை மகிழ்வித்த சித்ரா, மிகப்பெரிய சோகத்தை சில மாதங்களுக்கு முன் சந்தித்தார். அவரது அன்பு மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சித்ராவால் இந்த இழப்பை தாங்க முடியவில்லை. பாடுவதையே நிறுத்தினார். பல வாய்ப்புகள் வந்தும் பாட மறுத்து வந்தார். இந்நிலையில், இப்போது மலையாளத்தில் வெளியாகும் ஒரு படத்தில் பாட சம்மதித்தார். `இஷ¢டம் + ஸ்நேகம் = அம்மாÕ என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக்கொண்டார். இது ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை சொல்லும் பாடல். எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையில் அந்தப் பாடல் சமீபத்தில் சென்னையிலுள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவானது. பாடிக்கொண்டு இருக்கும்போதே தன்னையும் மீறி வந்த அழுகையை சித்ராவால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் கதறி அழுதுவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர். இயக்குனர், இசையமைப்பாளர் சித்ராவை தேற்றினார்கள். Ôஇப்போதுதான் அவர் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். இனி சினிமாவில் தொடர்ந்து அவர் பாடுவார்Õ என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Post a Comment