அப்போ குரோர்பதி... இப்ப லட்சாதிபதி: சோகத்தில் இலியானா!

|


தெலுங்கு நடிகை இலியானா தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக குறைத்துள்ளார். இதன் மூலமாவது புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்.

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை இலியானா. சம்பள விஷயத்திலும் அவர் கொடிதான் உயரே பறந்தது. ரூ. 1 கோடி மட்டுமே கேட்டு வந்த இலியானா தனது படங்கள் வெற்றிகரமாக ஓடுவதால் சம்பளத்தை ரூ. 1.5 கோடியாக்கினார். நண்பன் படத்தில் அவர் சம்பளம் இதுதான்.

தற்போது அல்லு அர்ஜூனுடன் நடிக்க ரூ. 2 கோடி கேட்டுள்ளார். இவர் நாளுக்கு நாள் இப்படி ஒரேயடியாக சம்பளத்தை ஏற்றுவதால் அவரை ஒப்பந்தம் செய்யவே தயாரிப்பாளர்கள் தயங்கி வந்தனர்.

இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது இலியானாவின் தொடர் தோல்விகள் காரணமாக.

இப்போது தோல்வி முகத்தில் உள்ள இலியானாவுக்கு இவ்வளவு கொட்டிக் கொடுப்பதை விட, புதுமுககங்களுக்கு குறைவாகக் கொடுத்து வேலை வாங்கலாமே என்ற நினைப்பில் தயாரிப்பாளர்கள் வேறு பக்கம் போய்விட்டார்களாம்.

அடடா எனக்கு வரவேண்டிய படமெல்லாம் மற்றவர்களுக்கு போகிறதே என்று இலியானா ஆதங்கப்பட்டுள்ளார். பின்பு தான் ஞானோதயம் பிறந்து தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாகக் குறைத்துள்ளார். நல்ல வேடம் என்றால் ரூ 50 லட்சத்துக்கும் ஓகே என்கிறாராம்!

 

Post a Comment