7/25/2011 10:52:01 AM
'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தில் லூர்து மேரி என்ற நிஜ கேரக்டரில் நடித்துள்ளார் அஞ்சலி. இதுகுறித்து அவர் கூறியதாவது: படத்தின் இயக்குனர் வடிவுடையான் கதையை சொன்னதும் ஒப்புக் கொண்டேன். லூர்து மேரி என்ற கேரக்டர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக இயக்குனர் சொன்னதும் அவரை சந்திக்க விரும்பினேன். இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவரின் பேச்சு, மேனரிசம் போன்றவற்றை அழகாகச் சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே செய்தேன். வழக்கம்போல நடிப்பதென்றால் எளிதானது. ஆனால், நிஜ கேரக்டர் போன்று உணர்வுகள் வரவேண்டும் என்பதற்காக, சிரமப்பட்டு நடித்தேன். அப்போதுதான் நிஜ கேரக்டரில் நடிப்பது சவாலான விஷயம் என்று தெரிந்தது. மலையாளம் கலந்த தமிழ் பேசி நடித்திருக்கிறேன். சீனியர் ஆர்ட்டிஸ்ட் கரணுடன் சேர்ந்து நடிக்க முதலில் பயந்தேன். பின்னர் அவரின் எளிமையான பேச்சு, அந்த பயத்தை போக்கியது. 'அங்காடித் தெரு'வுக்கு பிறகு எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் படமாக இது அமையும்.
Post a Comment