7/25/2011 10:53:22 AM
நடிகை நமீதா நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு ஐந்தாறு படங்களில் நான் நடிக்காமலேயே எனது படம், பெயரை பயன்படுத்தி சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்தனர். ரசிகர் மன்றம் என்ற பெயரில் எனது பெயரைப் பயன்படுத்தினார்கள். இது ஒரு பிரபல நடிகைக்கு நேரும் சங்கடம் என்று கண்டும் காணாமல் இருந்து விட்டேன். ஆனால் சோனா என்பவரின் செயல் அநாகரீகமானது. என்னை கிண்டல் செய்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் எனக்கு அதுகுறித்து எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், அதற்கு நான் பதில் அனுப்பவில்லை என்றும் கூறி வருகிறார். அவர் எந்த எஸ்எம்எஸ்சும் எனக்கு அனுப்பவில்லை. என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்கிறார். யார் இந்த சோனா? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். அவருக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். அடிப்படை நாகரீகம் தெரியாதவராக இருக்கிறார். என்னை கொச்சைப்படுத்தி கோ படத்தில் நடித்ததற்காக அவரல்லவா வெட்கப்பட வேண்டும். உண்மையிலேயே என்மீது மரியாதை இருந்தால் அந்தப் படத்தில் நடிக்க அவர் மறுத்திருக்க வேண்டும். அமைதியாக இருக்கும் என்னை அவர் சீண்டிப் பார்ப்பது ஏன்? என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதை சோனா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நமீதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment