ரஜினிக்காக பழனியில் 1008 பேர் மொட்டை போட்டு நேர்த்திக் கடன்!

|


நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று திரும்பியதால், அவருடைய ரசிகர்கள் 1008 பேர் பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் தொழிலாளர் சங்க உறுப்பினர்களான இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய பழனி முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்தி பழனி சண்முக நதியில் நீராடினர். பின்னர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கோயிலுக்கு பாதையாத்திரை மேற்கொண்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர்கள் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மன்ற நிர்வாகி திருப்பூர் முருகேஷ், "எங்கள் அன்புத் தலைவர் ரஜினி அவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப வேண்டும் என்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தோம். ரஜினி நலமுடன் திரும்பியதையடுத்து திருப்பூரில் இருந்து பழனி வந்த 1008 ரசிகர்களும் சண்முக நதியில் நீராடி முடி காணிக்கை செலுத்தி எங்களது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறோம். ரஜினி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அந்த உணர்வுதான் அவருக்காக எங்களை எதையும் செய்ய வைக்கிறது," என்றார்.
 

Post a Comment