வித்யாபாலனுக்கு கல்யாணமாகி விட்டதாக பாலிவுட்டில் பரபரப்பு

|


நடிகை வித்யா பாலனுக்கும் யுடிவி நிறுவனத்தின் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே திருமணம் முடிந்து விட்டதாக ஒரு தகவல் பாலிவுட்டில் பரவியுள்ளது.

பாலிவுட்டில் நடித்து வரும் நடிகை வித்யா பாலன் தற்போது மறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கும், சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே திருமணம் முடிந்து விட்டதாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது.

இருவரும் கல்யாணத்தை முடித்துக் கொண்டு தேனிலவுப் பயணத்தையும் தொடங்கியிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த வாரம் இந்த ரகசிய திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சித்தார்த்தும், வித்யாவும் நெருங்கிப் பழகி வந்தனர். இருப்பினும் இதை வெறும் நட்புதான் என்று வழக்கமான நடிகைகளின் பாணியில் மறுத்து வந்தார் வித்யா. ஆனால் இப்போது கல்யாணம் முடிந்து விட்டதாக உறுதியான தகவல் பரவியுள்ளது.

இதையும் வித்யா மறுப்பாரா அல்லது தான் திருமதியாகி விட்டதாக ஒப்புக் கொள்வரா என்பது தெரியவில்லை?
 

Post a Comment