லாரா தத்தா 3 மாதம் கர்ப்பம்: குஷியில் மகேஷ் பூபதி

|


முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான லாரா தத்தா விரைவில் தாயாகவிருக்கிறார்.

பாலிவுட் நடிகை லாரா தத்தா பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி மணந்தார். இதையடுத்து கடந்த சில வாரங்களாகவே லாரா தத்தா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை லாரா மறுத்து வந்தார்.

இறுதியாக தற்போது தான் தான் தாயாகப் போகும் விஷயத்தை உறுதிபடுத்தியுள்ளார். கர்ப்பமாக இருப்பதால் லாரா நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருப்பதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

அவர் தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனால் லாராவும், மகேஷ் பூபதியும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளனர்.

லாராவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாவது,

தான் தாயாகப் போகிறோம் என்று லாரா குதூகலமாக உள்ளார். குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவர் எந்த படத்திற்கும் ஒப்பந்தம் போட மாட்டார். லாரா தற்போது டான் 2 மற்றும் அவரது சொந்த தயாரிப்பில் நடித்து வருகிறார் என்றார்.

இது குறித்து லாரா, பூபூதியை தொடர்புகொண்டபோது அவர்கள் கூறியதாவது,

நாங்கள் இருவரும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். புதிய வரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றனர்.

வாழ்த்துக்கள் லாரா...
 

Post a Comment