ஆடையைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை! - அசின்

|


பாலிவுட்டில் வதந்திகள், பரபரப்புகளைக் கிளப்பியே ஒருவரால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற புதிய வித்தையை அறிமுகம் செய்த பெருமை அசினுக்கு உண்டு.

கஜினிக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லாமல் இருந்த அசினுக்கு பெரிதாகக் கைகொடுத்தது சல்மான்கானின் சமீபத்திய ரிலீசான ரெடி.

இப்போது அமிதாப், அஜய் தேவ்கன் படங்களிலும் நடிக்கிறாராம் அசின்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் கூறுகையில், "ரெடி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆடையைக் குறைக்காமலேயே என்னால் ரசிகர்களை கவர முடியும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்தப் படம்.

என்னைப்பற்றி தொடர்ந்து வதந்திகள் பரவுவதாகக் கூறுகிறார்கள். இதை நானே உருவாக்குவதாகவும் சிலர் எழுதியுள்ளனர். இந்தி திரையுலகில் இதெல்லாம் சகஜம் என்று எனக்குத் தெரியும். அதனால் எதையும் நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம்... நான் படங்களில் தலையிட்டு ஹீரோவை மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகக் கூறுவது. நான் அப்படி ஒருபோதும் சொன்னதில்லை. அந்த நிலையிலும் இல்லை.

ஷாரூக்கானுடன் நடிக்கவில்லை...

ஷாருக்கானுடன் நடிப்பதாக நான் சொல்லவில்லை. அவரது '2 ஸ்டேட்ஸ்' படம் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. வேறு இரண்டு படங்களுக்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்போதைக்கு அபிஷேக்பச்சனுடனும், அஜய்தேவ்கனுடனும் நடிக்கிறேன்," என்றார்.

நீல்நிதின் முகேஷ்வுடனான காதலை எஸ்.எம்.எஸ். அனுப்பி நீங்கள் முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டபோது கடுப்பான அசின், "அதுபற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. என்னைப் பற்றி இதுபோல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன," என்றார்.
 

Post a Comment