கவுரவ வேடத்தில் ஆர்யா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுரவ வேடத்தில் ஆர்யா

8/11/2011 12:24:27 PM

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இரண்டாவது ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. மூன்றாவது ஷெட்யூல் எப்போது என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் இயக்குனர் ராஜேஷ். ராஜேஷின் முந்தைய இரு படங்களைப் போலவே காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகின்றனர். இதிலும் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவர்கள் தவிர அழகம்பெருமாள், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகின்றனர். தன்னுடைய முதல் இரண்டு படங்களை போலவே இந்த படத்திலும் ஆர்யா அல்லது ஜீவாவை கவுரவ வேடத்தில் நடிக்க திட்டமிட்டார். இதனையடுத்து 'ஒரு கல் ஒரு கண்ணாடிÕ படத்தில் ஆர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.




 

Post a Comment