9/14/2011 3:05:39 PM
வி.இசட்.துரை இயக்கும், '6' படத்துக்காக, 25 கிலோ உடை எடை குறைய உள்ளதாக ஷாம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில் எனக்கு திருப்புமுனை தரும் படத்துக்காக காத்திருந்தபோது, துரை சொன்ன கதை பிடித்திருந்தது.ஒப்புக்கொண்டேன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமானது. மற்ற காட்சிகள் பல்வேறு மாநிலங்களில் படமாக உள்ளன. முதல்முறையாக 6 கெட்டப்புகளில் நடிக்கிறேன். ஹீரோயின் பூனம் கவுர். ஒவ்வொரு கெட்டப்பிலும் நடிக்கும்போது, வித்தியாசமான அனுபவம் ஏற்படுகிறது. கண்டிப்பாக இப்படம் மைல் கல்லாக அமையும். ஒரு கெட்டப்புக்காக 88 கிலோவரை எடை கூடினேன்.இனி நடிக்க உள்ள கெட்டப்புக்காக, 25 கிலோ எடை குறைக்க, டைரக்டர் சொல்லியிருக்கிறார். இப்போது 8 கிலோ குறைத்துள்ளேன். தெலுங்கில், 'கிக் ஷாம்' என்ற பெயரில் நடித்து வருகிறேன். இப்போது நடிக்கும் 'ஷேத்ரம்' படத்தில், என்னுடன் ஜெகபதி பாபு, பிரியாமணி நடிக்கின்றனர். தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன்.
Post a Comment