9/14/2011 2:58:18 PM
விக்ரம் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் விஜய். விக்ரம், அனுஷ்கா, சாரா, சந்தானம் நடித்த படம், 'தெய்வத்திருமகள்'. யுடிவி விநியோகித்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் விஜய். முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கும் இந்தப் படத்தை யுடிவி தயாரிக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக அனுஷ்கா, 'மதராசப்பட்டனம்' எமி ஜாக்ஷன் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். 'ஸ்டைலான ஆக்ஷன் படம் இது. இதுவரை தமிழில் டெக்னிக்கலாகவும் ஸ்டைலாகவும் இப்படியொரு படம் வந்ததில்லை என்பதுபோல் இருக்கும். போலீஸ் கதைதான் என்றாலும் இதுவரை பார்த்திராத காட்சி அமைப்புகள் புதுமையாக இருக்கும். ஆக்ஷன் காட்சிகளில் வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். முழுப்படமும் அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பிரான்ஸிஸ்கோ பகுதிகளில் நடக்கிறது. டிசம்பரில் தொடங்கி மார்ச் அல்லது ஏப்ரலில் படம் முடியும். அடுத்த மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இயக்குனர் விஜய், லொகேஷன் பார்ப்பதற்காக, நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்' என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment