9/14/2011 3:08:46 PM
'முகமூடி' படத்துக்காக, ரூ.50 லட்சம் செலவில் சிறப்பு உடை தயாரிக்க இருப்பதாக ஜீவா கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்துள்ள 'வந்தான் வென்றான்' வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. கண்ணன் இயக்கியுள்ளார். இது காதல், ஆக்ஷன் கொண்ட, ஜனரஞ்சகமான படம். ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள, 'நண்பன்' பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் விஜய், ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோருடன் நடித்தது பிரமிப்பான அனுபவமாக இருந்தது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும், 'நீதானே என் பொன்வசந்தம்' ரொமான்டிக் காதல் கதை. இதில் சமந்தாவுடன் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்த படம் தயாராகிறது. மற்ற மொழிகளில் வேறு நடிகர்கள் நடிக்கிறார்கள். நவம்பர் மாதம் மிஷ்கின் இயக்கும் 'முகமூடி' தொடங்குகிறது. இந்த படத்தில் எனது கனவு கேரக்டர் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த கேரக்டருக்காக, ரூ.50 லட்சம் செலவில் சிறப்பு உடை தயார் செய்கிறார்கள். இதற்காக ஹாங்காங் செல்ல இருக்கிறேன். இதையடுத்து ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இவ்வாறு ஜீவா கூறினார்.
Post a Comment