அறுவை சிகிச்சை: இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் நடிக்கும் சல்மான்

|


நரம்புக் கோளாறுக்காக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் சல்மான் கான் இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் நடிப்பைத் தொடங்குவார் என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சல்மான் கானுக்கு டிரைஜெமினல் நியூரால்ஜியா(Trigeminal Neuralgia) என்னும் நரம்புப் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவரது தாடைப் பகுதியில் வலி ஏற்பட்டு அவஸ்தை பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது.

இது குறித்து சல்மானின் தங்கை கணவர் அதுல் அக்னிஹோத்ரி பிடிஐ-க்கு கூறியதாவது,

அவர் தற்போது நலமாக உள்ளார். படப்பிடிப்பைத் துவங்கும் முன்பு ஓய்வு எடுக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர். மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் வரும் 10-ம் தேதி வாக்கில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அவரிடம் பாடிகார்ட் படம் எப்படி ஓடுகிறது என்பது பற்றி அவ்வப்போது தெரிவித்து வருகிறோம். படம் நன்றாக ஓடுவதால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். இது அவருக்கு முக்கியமான படம் என்றார்.

யாஷ் சோப்ராவின் ஏக் தா டைகர் படத்திற்காக சல்மான் தென் ஆப்பிரிக்கா செல்லவிருக்கிறார்.

சல்மான், கரீனா கபூர் நடித்துள்ள பாடிகார்ட் தபாங், மை நேம் இஸ் கான் பட சாதனைகளை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment