'டாப்லெஸ்' காஜல்... கடுப்பில் சூர்யா!

|


பிரபல பேஷன் பத்திரிகையான ‘எப்எச்எம்’மில் (FHM) டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

ஆங்கிலத்தில் வெளியாகும் இந்தப் பத்திரிகையின் அட்டையிலேயே காஜலின் இந்த தாறுமாறான கவர்ச்சி படம் வெளியாகியுள்ளது. மேலுடை ஏதும் அணியாமல், மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி அவர் போஸ் கொடுத்துள்ளார்.

அவரது இந்த கவர்ச்சிப் படம் பல்வேறு விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

பாலிவுட்டில் வாய்ப்புகளைப் பிடிக்கவே இந்த குறுக்கு வழியை அவர் கையாண்டிருப்பதாக பாலிவுட் பத்திரிகைகள் கிண்டலடித்துள்ளன.

அதேநேரம் இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட சூர்யா மகா கோபத்தில் உள்ளாராம். காரணம் கேவி ஆனந்த் இயக்கும் அவரது அடுத்த படமான மாற்றான் நாயகி காஜல்தான்.

ஏற்கெனவே நான் மும்பைக்காரி, என்னை தென்னிந்திய நடிகை என்று அழைக்காதீர்கள் என்று பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட காஜலுக்கு வக்காலத்து வாங்கி மீண்டும் அவரை தமிழில் நடிக்க வைத்திருந்தார்கள் கேவி ஆனந்த், சூர்யா போன்றோர். இப்போது டாப்லெஸ் போஸ் கொடுத்திருப்பது படத்துக்கு எதிர்மறை பப்ளிசிட்டியாகிவிடுமோ என்று யோசிக்கிறார்களாம்!

 

Post a Comment